என்னது தீபாவளி அன்று இறைச்சிக்கடை மூடலா? பேரதிர்ச்சியில் மக்கள்
தமிழகத்தில் சென்னையில் எதிர்வரும் 4ம் திகதி தீபாவளி அன்று இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி அன்று மகாவீரர் நினைவு நாளை முன்னிட்டு, நீர்வான் நாளான அன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள், சிறு இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி அன்று தான் இறைச்சி கடைகள் இரவு பகலாக இயங்கும் நிலையில், இவ்வாறான அறிவிப்பு சென்னை மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் முடி இருக்கும். சென்னை மண்டலம்-5 திற்கு உட்பட்ட கோட்டங்களில் அமைந்துள்ள, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
மேலும் நீர் வான் நாளன்று, பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.