விருது மேடையில் கண்கலங்கிய தீபா சங்கர் - நடந்தது என்ன?
விருது மேடையில் கண்கலங்கிய தீபா சங்கரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை தீபா சங்கர்
மியூசிக் கல்லூரில் படித்த தீபா சங்கருக்கு ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தொடர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார் தீபா.
இப்படத்தில் அவர் நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர் ‘குக் வித் கோமாளி’யில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கே சென்றார் தீபா. இவரை ரசிகர்கள் அனைவரும் தீபா அக்கா என்று செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள்.
மேடையில் கண்கலங்கிய தீபா சங்கர்
இந்நிலையில், ஒரு சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில், மேடையில் ஏறிய தீபாவிற்கு ஒரு திரை காண்பிக்கப்பட்டது. அந்த திரையில் தீபாவிடம் பரதநாட்டியன் கற்றுக்கொண்டவர்கள் அவரை குறித்து பெருமையாக பேசினர். சிறிது நேரத்தில் தீபாவிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பிள்ளைகள் ஓடி வந்து அவரை கட்டியணைத்தனர்.
அப்போது மேடையில் பேசிய தீபா,
அச்சர்னா அக்கா எனக்கு நிறைய பொருள் உதவிகள் செய்தார்கள். அர்ச்சனா நிறையே பேருக்கு உணவுகள் வழங்கி வருகிறார். எனக்கு தெரிந்தது ஒன்றுதான். அது பரதநாட்டியம். யாரெல்லாம் என்னிடம் வந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களிடம் பணம் வேண்டும் என்று கேட்கமாட்டேன்.
அந்த கலை ஆர்வம் இருந்தால் போதும், நாங்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்து வருகிறோம். என்னிடம் படித்த பிள்ளைகள் அந்த வேலையை செய்கிறார்கள். ஒரு பிள்ளை என்னிடம் வந்து சேரும்போது நான் சொல்வேன், பீஸ் வேண்டாம். நீங்கள் என்னை மாதிரி ஒரு 10 பேரை உருவாக்குங்கள். அது மட்டும்தான் நான் உங்களிடம் கேட்கக்கூடிய குருதட்சனை.
இவர்கள் எல்லாம் எனக்கு புதுசா கிடைத்த சொந்தங்கள். வாழ்க்கை ரொம்ப ஜாலியா மாறிவிட்டது. என்னுடைய 37 வயதிற்கு அப்புறம் என்னுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக மாறிவிட்டது.
சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் சிந்தனையை நல்லதாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்த படிகளை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டு போனால், காலம் அது வேலையை கண்டிப்பா செய்து விடும். இன்னும் நான் வாழ்க்கையில் நிறைய ஜெயிக்கணும்.
சாகுற வரைக்கும் இதுபோல குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருப்பேன் என்று கூறினார். அப்போது, மேடையில் நின்ற குழந்தைகள் தீபாவிற்கு ஒரு பரிசு பொருளை கொடுத்தனர்.
அந்த பரிசு பொருளை திறந்து பார்த்தபோது, தீபா கண்கலங்கி விட்டார். அந்த பரிசு பொருளில் தீபாவும், அவருடைய அம்மாவும் ஒன்றாக இருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் தீபா உணர்ச்சி வசப்பட்டார்.