இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்பே கணித்த மர்ம நபர்! அடுத்து காத்திருக்கும் அழிவு - வெளியான பரபரப்பு தகவல்
இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு வைரலாகி வருகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். இந்த நிலையில் அவரின் இறப்பை யாரோ ஒருவர் முன்பே கணித்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார் என்று பிப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுவிட் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் மே 25 ஆம் திகதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மார்ச் 17, 2062 அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை பதிவு செய்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை. எனினும் இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Queen Elizabeth II will die on September 8th 2022
— ? (@aidemleoxide) February 4, 2022