இறந்த பெண் சுடுகாட்டில் உயிர் பெற்ற ஆச்சரியம்... இறுதிநிமிடத்தில் நடைபெற்ற பரபரப்பு
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த லக்ஷ்மி பாய்(72) என்ற பெண், மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் லஷ்மி பாய்க்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனையில் லஷ்மி பாய்க்கு கொரோன இல்லை என தெரியவந்துள்ளது, இதனையடுத்து அவரது உடலில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருந்ததால், லஷ்மி இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் லஷ்மியின் உடலை இறுதிச்சடங்கிற்க்காக சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது லஷ்மி பாயின் உடல் வெப்பமாகவே இருந்ததால் லஷ்மியின் பேத்திக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவரை அழைத்து லஷ்மியை சோதனை செய்ய வைத்துள்ளார், அப்போது லஷ்மிக்கு நாடி துடிப்பு இருந்ததை மருத்துவர் கண்டறிந்துள்ளார்.
ஆக்ஸிஜன் குறைவாக இருந்த லஷ்மி மீண்டும் சுடுகாட்டிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலே அவர் உயிர் பிரிந்துள்ளது.