மாரடைப்பால் இறந்த பெண்: 45 நிமிடங்களுக்கு பின்பு உயிர் பிழைத்த அதிசயம்
அமெரிக்காவில் மகளை பிரசவத்திற்கு அனுமதித்துவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த தாய் ஒருவர் 45 நிமிடங்களுக்கு பின்பு உயிருடன் எழுந்த அதிசயம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் வசித்து வரும் பெண் ஒருவரின் பெயர் கேத்தி கேத்தி பாட்டன். அவர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
தனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது தெரியவந்த நிலையில், உடனே வீட்டிற்கு சென்ற அவர் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்பு கேத்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் 45 நிமிடத்திற்கு பின்பு மீண்டும் உயிரோடு எழுந்த நிலையில், அவரது மகளுக்கும் பெண் பிறந்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட போது கேத்திக்கு இதயத்துடிப்பு இயங்காமலும், மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமலும் இருந்துள்ளது. பின்பு 1 மணி நேரம் சிபிஆர் வழங்கப்பட்டு மீண்டும் உயிர் வந்துள்ளது.
கடவுள் எனக்கு உயிர் கொடுத்துள்ளார் என்று கேத்தி மகிழ்ச்சியுடன் கூறினார். வாழ்க்கையை வாழ எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனால், கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
அதே நேரத்தில், கேத்தியின் மகள் என் அம்மா, என் மகளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என இருந்திருக்கிறது; ஒருவேளை அதனால்தான் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்றும் தனது அம்மாவிற்கும், மகளுக்கும் மறுஜென்மம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
