இறந்தவர்கள் கனவில் வந்தால் அபசகுணமா? நல்லதா?
உறங்கும் போது நாம் காணும் கனவுகளுக்கு பல அர்த்தம் கூறப்படுகின்றது. நமது ஆழ் மனதின் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றது.
கனவுகள் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே வரும் நிலையில், இந்த கனவில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
இறந்தவர்கள் கனவில் வந்தால்?
இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வருவதுடன் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று அர்த்தமாம்.
இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதிப்பது போன்று கனவு வந்தால், எல்லாவித நன்மை ஏற்படுமாம்.
இறந்த போன ஒருவரின் தாய் உங்களுக்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே கனவில் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் பேசுவது போன்று கனவு வந்தால் பேரும், புகழும் கிடைக்குமாம்.
வேண்டாதவர்கள் யாரும் இறப்பது போன்று கனவு வந்தால் துன்பங்கள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்று அர்த்தம்.
ஆனால் இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் அது கெட்டதாகும்.
இறந்தவர்களை தூக்கி செல்வது போன்று கனவு வந்தால் நன்மை ஏற்படும்.
கனவில் இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதிப்பது போன்று வந்தால், எல்லாவிதமான நன்மையும் ஏற்படும்.
இறந்து போன தாய் தந்தை நமது கனவில் வந்தால், வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிக்க வந்ததாக அர்த்தம்.
கனவு காண்பவர்களே இறந்து போவது போன்று கனவு கண்டால், நன்மை ஏற்படுவதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
