இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? குழப்பத்திற்கு பதில் இதோ
கனவில் இறந்தவர்கள் வருவது எச்சரிக்கையா? அதிர்ஷ்டமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாம் தூங்கும் போது நமது மூளையும் சேர்ந்து தூங்குவது கிடையாது. அதாவது எதாவது ஒன்று நமது சிந்தனைக்குள் வந்து அது கனவாக பிரதிபலிக்கின்றது.
அதிலும் இறந்தவர் ஒருவரை கனவில் காண்பது என்பது மிகவும் அரிதாகும். அவ்வாறு கனவில் வரும் இறந்த நபர்கள் நமக்கு எச்சரிக்கின்றனரா? அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது.
தற்போது இறந்தவர்கள் கனவில் வருவதற்கான அர்தத்த்தினை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கனவின் அர்த்தம் என்ன?
இறந்தவர்கள் கனவு காணும் நபர்களுடன் இன்னும் உயிருடன் இருப்பது போன்ற கனவு ஏற்பட்டால், மேலும் இயல்பான சூழலில் உரையாடல் காணப்பட்டால், அவை ஆறுதலாகவும், இயல்பானதாகவும் இருக்குமாம். இந்த கனவானது செய்தியையோ, நம்பிக்கையோ அளிப்பதுடன், இழப்பிலிருந்து மீண்டு வர சொல்வதற்கான அறிகுறியாக சாஸ்திரத்தில் பார்க்கப்படுகின்றது.
அதுவே சில தருணங்களில் இறந்தவர்கள் நம்மை வந்து ஆசீர்வதிப்பது போன்று கனவு கண்டால், அதாவது உங்களது வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிக்கும் போதுதான் இந்த கனவுகள் வரும். இவை முன்னோக்கி உங்களை சொல்ல தூண்டுவதற்கான அறிகுறியாகும்.

மேலும் இறந்தவர் கனவில் வந்து உங்களுக்கு வழிகாட்டுவது போன்று ஏற்பட்டால், மு்ன்னோக்கி செல்ல வேண்டிய திசை தெரியாமல் நீங்கள் தவிக்கும் போது உங்களுக்கு வழிகாட்டுவதாகவும், ஆலோசனை அளிப்பதாகவும் அர்த்தம்.
துன்புறுத்துவது போன்று கனவு ஏற்பட்டால், வருத்தம், குற்றவுணர்வு, துக்கத்தினை பிரதிபலிக்கும். மேலும் இந்த கனவு மன உளைச்சல் உணர்வை ஏற்படுத்துகின்றது.

துக்கத்திலிருந்து நீங்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்பதை குறிக்கும் கனவாகவும் இருக்கின்றது. ஒருவர் திடீரென இறக்கும்போது, அந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாத போது நிகழ்கின்றது. உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கி வைத்து அவற்றினை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் போகும் போது இவ்வாறு துக்கத்திலிருந்து மீண்டு வராதது போன்று கனவு ஏற்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |