பேரதிர்ச்சியில் மருத்துவர்கள்! பிணவறையில் இருந்த நபருக்கு திடீரென்று உயிர் வந்த அதிசயம்
உத்தர பிரதேச மாநிலத்தில் இறந்ததாக எண்ணிய நபருக்கு பிணவரையில் உயிர் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ்குமார் கடந்த வியாழன் இரவு விபத்தில் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி பிணவறையில் பிரேத பரிசோதனை செய்ய வைக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, பிணவறையில் உள்ள குளிரூட்டி பெட்டியில் ஸ்ரீகேஷ்குமார் வைக்கப்பட்டார். சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஆவணங்களில் கையெழுத்தை மருத்துவமனை ஊழியர்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஸ்ரீகேஷ்குமார் உடலில் அசைவு இருப்பதை அவரது உறவினர் மதுபாலா கண்டறிந்தார்.
இது குறித்து அவர் டாக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக டாக்டர்கள் பார்த்தபோது, ஸ்ரீகேஷ்குமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியா் ஷிவ் சிங் கூறியயுள்ளதாவது, ஸ்ரீகேஷ்குமார் படுகாயங்களுடன் அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இதயத்துடிப்பு இல்லை. பல முறை பரிசோதனை செய்து பார்த்ததாகவும், இதன் பிறகே இறந்துவிட்டதாக அறிவித்ததாக பணியில் இருந்த வைத்தியம் என்னிடம் கூறினார்.
காலை 10 மணிக்கு மேல் பொலிஸாரும், குடும்பத்தினரும் வந்து பார்த்த போது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது அரிதிலும் அரிதான சம்பவம் ஆகும்.
இதை அலட்சியம் எனக்கூறிவிட முடியாது.
உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீகேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறி மீரட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு இன்னும் சுய நினைவு வரவில்லை. ஆனால், அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.