கொரோனாவின் உச்சம்... இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட அவலம்! கலங்க வைக்கும் காட்சி
கொரோனா பாதிப்பினால் இறந்தவரின் சடலத்தினை ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு கவச உடை அணிந்து சில பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த அவலம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாகவே மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கட்டுக்குள் வராமல் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
அதிலும் கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் மிக அதிகமாக இருப்பதுடன் உயிரிழப்பும் அதிகமாகவே இருக்கின்றது.
தற்போது காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவரின் சடலத்தினை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால், பாதுகாப்பு உடையினை அணிந்து சில பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் சடலத்தினை கொண்டு வந்துள்ளது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
#NewsAlert | Karnataka: Due to shortage of ambulances, the dead body of a Covid patient carried on a bike for cremation. The video goes viral.
— TIMES NOW (@TimesNow) May 10, 2021
Details by Imran. pic.twitter.com/RVKDpySnlz