இவருக்கு வயசே ஆகாதா? இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் டிடி ... வைரல் புகைப்படங்கள்!
40 வயதை கடந்த நிலையிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் பிரபல தொகுப்பாளி டிடி பீச் நிற ட்ரெண்டிங் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.இவருக்கு பெரியளவில் அடையாளத்தை கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான்.

சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தனிமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை நிரூபித்து வருகின்றார்.

தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மாத்திரமே தொகுத்து வழங்கிவரும் டிடி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.அவரை இன்ஸ்டாகிராமில் 28 லட்சம்பேர் வரை பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் டிடி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |