ரொமியோ- ஜூலியட் சந்தித்த இடத்துக்கே போய் டிடி பார்த்த வேலை! வைரலாகும் காணொளி
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளி டிடி இத்தாலியின் வெரோனா கிராமத்துக்கு சென்று ரோமியோ ஜூலியட் முதல் முதலில் சந்தித்த பிரபலமான பால்கனியாக அறியப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் நின்று என்னோட ரொமியோ எங்க இருக்கிங்க... சீக்கிரம் வாங்க என சத்தமிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவரின் இந்த குணத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.
இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான்.இந்த நிகழ்ச்சி அவரின் அடையாளமாவே மாறியது என்றால் மிகையாகாது.

சின்னத்திரையில் மட்டுமன்றி விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து வருகின்றார்.

இந்நிலையில், இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி வெரோனா கிராமத்துக்கு சென்று ரோமியோ ஜூலியட் முதல் முதலில் சந்தித்த பிரபலமான பால்கனியில் நின்று, நகைச்சுவையாக தன்னுடைய ரோமியோ பற்றி பேசிய விடயங்களையும், அதற்கு கீழே நின்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் கொடுத்த ரியாக்ஷனையும் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் டிடி- யின் இந்த குறும்பு செயலுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |