நடுரோட்டில் வெளிநட்டவர் பார்த்த வேலை.. டிடியை சந்தேகிக்கும் நெட்டிசன்ஸ்- அவரே கொடுத்த விளக்கம்
லண்டனில் வெளிநட்டவர் ஒருவர் டிடியை தூக்கி சுற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
டிடி தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை.
இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது 38 வயதாகும் டிடி-க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.
டிடியை தூக்கிய வெளிநட்டவர்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில், வெளிநட்டவர் ஒருவர் அவரை தூக்கி சுற்றும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி லண்டனில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். காணொளியை பார்த்த ரசிகர்கள் வெளிநட்டவர் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |