நெற்றி நிறைய குங்குமம்... புதிய தோற்றத்தில் தழிழ் புத்தாண்டு கொண்டாடிய தொகுப்பாளினி டிடி!
தொகுப்பாளினி டிடி அழகிய சேலையில் நெற்றி நிறைய குங்குமம் வைத்துக்கொண்டு தெய்வீகமாக தழிழ் புத்தாண்டை வரவேற்று தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பது வழக்கம்.
காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். அந்த நிகழ்ச்சி டிடியின் அடையாளமாகவே மாறியது என்றால் மிகையாகாது.
சின்னத்திரையில் மட்டுமன்றி விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.
சில மாதங்டகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்ட டிடி, தற்போது அதிலிருந்து மீண்டும் அதே உத்வேகத்துடன் நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் டிடி தற்போது வெளியி்ட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |