மருத்துவரை பளார் என கன்னத்தில் அடித்த செவிலியர்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி
உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் ஒருவரும் மாறி மாறி தாக்கி கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் தகாத வார்த்தையால் பேசியதால் செவிலியர் அவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகின்றது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் இறந்துவிட்டார்.
இதனால் அவர் இறந்ததற்கான சான்று தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.
#WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday.
— ANI UP (@ANINewsUP) April 27, 2021
City Magistrate Ramji Mishra says, "I have spoken to both of them. They say they were under stress and overburdened. We will probe this & speak to both of them."
(Note: Abusive language) pic.twitter.com/XJyoHv4yOh
பின்னர் அந்த செவிலியர் மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளார். உடனே விஷயத்தை எழுதி கொடு என கேட்டுள்ளார்.
அந்த செவிலியர் கோபத்தில் இருந்த போது உறவினர்கள் மீண்டும் வந்து அந்த சான்று குறித்து கேட்டனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த செவிலியர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளனர்.