அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வார்னர் விளையாடும் அணி இதுதானா? முன்னாள் வீரர் கணிப்பு!
நடந்து முடிந்த டி20 உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வென்று முதல் டி20 உலககோப்பையை தக்க வைத்தது. தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இதில், வெற்றிக்கு பல ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதுணையாக இருந்தாலும், டேவிட் வார்னரின் சிறப்பான ஓப்பனிங் ஆட்டம் தான் எதிரணிக்கு சவாலகவே அமைந்தது.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் நீக்கப்பட்ட அவர் கடைசி சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர்ந்து அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மெகா ஏலத்தில் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை விடுவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் தக்க வைக்கவும் வாய்ப்பு அதிகம்.
இதற்கு முன் வார்னர் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆர்வம் காட்டியதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவிக்கையில், டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நிச்சயம் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
ஏனென்றால், பெங்களூரு மைதானம் வார்னருக்கு ஏற்றார் போல் இருக்கும் அதுமட்டுமின்றி அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி உள்ளதால் அந்த அணிக்கு ஒரு கேப்டன் அவசியம்.
அதனால் ஏற்கனவே கேப்டன்சி அனுபவமுள்ள டேவிட் வார்னர் ஆர் சி பி அணிக்கு துவக்க வீரராக விளையாடுவது மட்டுமின்றி கேப்டனாகவும் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே ஆர்சிபி அணியில்தான் நிச்சயம் வார்னர் விளையாடுவார் என பிராட் ஹாக் (Brad Hogg) தெரிவித்துள்ளார்.