25 ஆண்டுகளாக ஒரே உணவு! மனைவியை பற்றி ஆச்சரிய தகவலை வெளியிட்ட டேவிட் பெக்காம்;
இங்கிலாந்து கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் மனைவியின் உணவு பழக்கத்தை பற்றி கூறிய தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஸ்பைஸ் கேர்ளுடன், முன்னாள் கால்பந்து வீரரான பெக்காமிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் புரூக்ளின், ரோமியோ, குரூஸ் மற்றும் இளையவர், ஹார்பர்.
46 வயதான டேவிட் பெக்காம் 25 ஆண்டுகளாக அவரது மனைவி விக்டோரியா ஒரே உணவை சாப்பிட்டு வருவதாக பெக்காம் கூறிய தகவல் பலரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பல ஆண்டுகளாக இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டதாகவும், இந்நிகழ்வு அற்புதமான ஒன்று அவருக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று என தெரிவித்து இருக்கிறார்.

என்னதான் பல வகையான உணவுகள் சமையலறையில் இருந்தாலுமே, விக்டோரியா உடல்நலத்தால், வறுக்கப்பட்ட மீன் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறாராம்.
இந்த உணவை தவிர ஒரே முறை மட்டுமே மற்ற உணவை சாப்பிட்டுள்ளாராம். அதுவும் மகள் ஹார்பர் கர்ப்பமாக இருந்தபோது. இதனைத்தொடர்ந்து, மனைவி விக்டோரியாவின் உணவு பழக்கங்களை பற்றி விளக்கிய டேவிட் பெக்காம், கடந்த 25 ஆண்டுகளாக இதை மட்டுமே சாப்பிட்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டேன்.

மேலும், நான் அவளை சந்தித்தபோதிலிருந்தே அவள் வேகவைத்த மீன் மற்றும் காய்கறிகளையே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் பல உணவுகளை சாப்பிடுபவன்.
ஆனால் அவர் இந்த உணவுகளை மட்டுமே சாப்பிட்ட பழக்க உடையவள் என சீன பண்டிக்கையின் விருந்தின் போது இதை ப்பற்றி பெக்காம் தெரிவித்து இருக்கிறார்.