இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகை ரோஜாவின் மகள் - ரோஜா எமோஷ்னல்
நடிகை ரோஜாவின் மகள் தற்போது அமெரிக்காவில் செய்திருக்கும் சாதனை குறித்து ரோஜா எமோஷனலாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ரோஜாவின் மகள்
தமிழ் சினிமாவில் 90ஸ் 80ஸ்களின் மிகவும் சிறப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழ் சினிமாவில் 'செம்பருத்தி' படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பின்னர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி என்பவரை காதலித்து 2002-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு அன்ஷுமாலிகா (அனுஷ்) என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது நடிப்பில் இருந்து விலகி ஆந்திர அரசியலில் பிஸியாக இருக்கிறார் ரோஜா. ஆனால் சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் ரோஜா.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக ரோஜா கலந்துகொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு அன்னையர் தினம் ரோஜாவிற்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.
தனது மகள் அன்ஷுமாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University Bloomington) கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளதை ரோஜா பெருமையுடன் சமூக வலைத்தள பக்கத்தில பகிர்ந்துள்ளர்.

ரோஜா எமோஷ்னல்
ரோஜா பதிவிட்டுள்ள பதிவில் "இந்த அன்னையர் தினம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
எனது மகள் அன்ஷுமாலிகா மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் (Highest Distinction) பட்டம் பெற்றுள்ளார். இது ஒரு தாயாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
வெறுமனே பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் ஒரு சாதனையை அன்ஷுமாலிகா செய்திருக்கிறாள்.

இந்தியானா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான 'ஹெர்மன் பி வெல்ஸ் டிஸ்டிங்குயிஷ்ட் சீனியர் அவார்டு' (Herman B Wells Distinguished Senior Award) ரோஜாவின் மகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி ரோஜாவின் மகள் தான். கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விடயம் ரோஜா மற்றும் அவருடைய கணவருக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளது.

சினிமாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை சினிமாவில் தான் செல்ல விடுவார்கள். ஆனால் தற்போது ரோஜாவின் மகள் கல்வியில் சர்வதேச அளவில் சாதித்திருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |