சிக்கன் சாப்பிட்ட தந்தை மகள்... அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வீட்டில் சமைத்து சிக்கன் சாப்பிட்ட 4 வயது மகள் மற்றும் அவரது தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் சாப்பிட்ட தந்தை மகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த் (33) மற்றும் பவித்ரா. இவர்களுக்கு, மிதுஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.
கோழிப்பண்ணை அமைப்பதற்கு முடிவேடுத்து அதற்கான பணிகைளை செய்து வந்த இவர்கள், சம்பவத்தன்று வீட்டில் இரவு சிக்கன் எடுத்து சமைத்து கௌதம் மற்றும் மகள் மிதுஸ்ரீ இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறுமிக்கு சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்ட நிலையில், திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைததுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகள் இறந்த நிலையில், மகள் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌதம் மூச்சித்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த புகாரில் தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதுடன், குடித்துவிட்டு அதிகமான மாமிசம் சாப்பிட்டதாக மனைவி புகார் கூறியுள்ளார்.
இந்நிலையில், கௌதம் மற்றும் மிதுஸ்ரீ ஆகிய இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னரே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று பொலிசார் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |