சர்க்கரை நோயாளர்கள் பேரீச்சம்பழம் அல்வா சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்மில் சிலருக்கு மூன்று வேளை உணவு சாப்பிட்டாலும் ஒரு வேளையாவது இனிப்பு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது.
இப்படி ஆசையிருப்பவர்கள் பேரீச்சம்பழத்தை வைத்து அல்வா செய்து சாப்பிடலாம்.
இந்த அல்வாவின் சிறப்பம்சம் என்னவென்றால், செய்வதற்கு இலகுவாக இருக்கும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், பேரீச்சம்பழ அல்வா எப்படி இலகுவாக செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பேரீச்சம்பழம் அல்வா
தேவையான பொருட்கள்:
- பேரிச்சம்பழம் - 1 கப் (விதை நீக்கியது)
- நெய் - 1/3 கப்
- சர்க்கரை - 2 ஸ்பூன்
- சூடான நீர் - 1/2 கப்
- ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
- உடைத்த முந்திரி - 1 ஸ்பூன்
அல்வா செய்முறை
முதலில் பேரீச்சம்பழத்தை விதைகளை நீக்கி, அதனுடன் வெந்நீர் கலந்து சரியாக 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
30 நிமிடங்களுக்கு பின்னர் மென்மையாக மாறிவிடும். அதனை சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடேற்றும் பொழுது அல்வாவின் நிறம் மாற ஆரம்பிக்கும் இது வரையில் கரண்டியை கடாயிலிருந்து எடுக்கக் கூடாது.
பின்னர், கிளறும் பொழுது பேரீச்சம்பழ கலவை கெட்டியாவது போன்று தோன்றினால் அடுப்பை குறைத்து விட்டு கொஞ்சமாக நெய் ஊற்றிக் கிளறவும்.
அல்வாவின் பதம் பார்க்கும் பொழுது ஒட்வது போல் உணர்ந்தால் அல்வா இன்னும் தயாராகவில்லை என அர்த்தம். அடுப்பை மிதமாக வைத்து கொண்டு நெய் ஊற்றி ஊற்றி கிளறவும். நெய் ஒரு கட்டத்திற்கு மேல் உறிஞ்சிவது குறைந்து நெய் வெளியேற ஆரம்பிக்கும்.
இந்த சமயத்தில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி ஆகியவற்றை அல்வாவில் தூவி இறக்கினால் சுவையான பேரீச்சம்பழ அல்வா தயார்!
முக்கிய குறிப்பு
நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் மட்டுமே பேரீட்சைப்பழம் சாப்பிடலாம். தினமும் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். அதே சமயம் பேரீட்சைப்பழத்தினால் செய்யப்படும் உணவுகளும் அப்படி தான் அளவாக சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |