தாயின் ஆசைக்காக கோயில் கட்டிய விஜய் பட வில்லன்: வைரலாகும் கோயில் புகைப்படங்கள்
தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார் வில்லன் நடிகர்.
விஜய் பட வில்லன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் டேனியல் பாலாஜி. இவர் 2000ஆம் ஆண்டு வெளியான “சித்தி” சீரியல் மூலம் தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
அந்த தொடரிலும் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும், டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளிக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டியவர். தமிழில் இவரின் முதல் திரைப்படம் ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் தான்.
அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், என்னை அறிந்தான், பைரவா, இப்படை வெல்லும், வடசென்னை, பிகில் போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவரின் நடிப்பில் இன்னும் சில படங்கள் திரைக்கு வர காத்திருக்கிறது.
தாயிற்காக கோயில்
இந்நிலையில், டேனியல் பாலாஜியின் கோயில் வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வைரலாகியிருந்தது.
இது குறித்து ஆராய்ந்த போது அவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டி முடித்துள்ளார்.
மேலும் இந்தக் கோயிவை தனது சொந்த செலவில் அவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக்கோயில் கும்பாபிஷேகம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தக் கோயிலை அவர் தனது தாயின் ஆசைக்காக கட்டியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டது.