ரூம் ஹீட்டர் போடுற பழக்கம் இருக்கா? உயிரை பறிக்கும் ஆபத்து உங்களுக்கு..
தற்போது பெரும்பாலான வீடுகளில் மின் சாதனங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நவீன மயமாக்கலுக்கு மக்கள் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
கால நிலை மாற்றங்கள் ஏற்படும் சமயத்தில் உடம்பை அதற்கு பழக்காமல் அதற்கு மாற்றீடாக மின் சாதனங்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் கால நிலை மாற்றங்களுக்கு பழகாமல் வேறு விதமான பிரச்சினைகளை கொண்டு வருகிறது.
குளிர் காலம் வந்து விட்டால் கனமான போர்வைக்குள் தூங்கும் காலம் சென்று, ரூம் ஹீட்டர்கள் பயன்படுத்தும் பழக்கம் வந்து விட்டது. இது அறையை சூடாகவே வைத்து கொள்ளும்.
இரவு முழுவதும் ஹீட்டரை போட்டு தூங்கும் பொழுது சில ஆபத்தான விடயங்கள் நடக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படியான ஆபத்துக்கள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ரூம் ஹீட்டர் பயன்பாட்டில் ஆபத்து
1. அறையில் ஹீட்டர் பயன்படுத்தும் பொழுது ஆக்ஸிஜன் அளவு குறையும். அதிலும் சிலர் அறையை பூட்டிக் கொண்டு உறங்குவார்கள். இது ஆக்ஸிஜன் அளவை குறைத்து, தலைவலி, தலை சுற்றல், சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
2. அறையில் ஹீட்டர் பயன்படுத்தும் பொழுது வெப்பமான காற்று காரணமாக சருமத்தில் வறட்சி, அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை போன்ற சரும பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. அதிலும் கண்கள் வறட்சியாக இருப்பது போன்று உணர முடியும்.

3. வறண்ட காற்றானது உங்களது தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு மூச்சுதிணறல், சளி, இருமல், சைனஸ் போன்ற நோய்கள் வரலாம்.
4. ஹீட்டர் காற்றில் தூசி மற்றும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்கும் பொழுது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
5. ரூம் ஹீட்டர் பயன்படுத்தினால் நீரிழப்பு பிரச்சனை வரும் என தெரிந்திருப்போம்.அதற்கான முக்கிய காரணம், இரவு முழுவதும் வெப்பமூட்டும் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் உங்கள் உடம்பில் உள்ள தண்ணீர் ஆவியாக வெளியேறி விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |