ஐஸ் வாட்டர் பிரியரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது.
தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் தண்ணீரை குளிர்காலத்தில் எவ்வாறு பருக வேண்டும் என்பது தொடர்பில் நம்மில் பலரும் கவனம் செலுத்துவது இல்லை.
குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை பருகலாமா?அப்படி குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலர் கோடைக் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வது உடலில் பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
பாதக விளைவுகள்
ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகள் அதிகமா காணப்படும்.
இந்நிலையில் குளிர்ந்த நீரைக் குடிப்பது இந்த பிரச்சினைகளை மேலும் ஊக்குவிக்கும். இதுமட்டுமின்றி, குளிர்ந்த நீரை குடிப்பதால் சுவாச மண்டலத்தில் சளி உருவாகும். இதன் காரணமாக பல சுவாச தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாகின்றது.
நீங்கள் குளிர்ந்த நீரைக் குடித்தால், உடலில் கொழுப்பு குறையாது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பொதுவாகவே கோடைகாலத்திலும் குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் மறந்தும் கூட குளிர்ந்த நீரை குடிக்காதீர்கள்.
குளிர்ந்த நீரைக் குடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கி, செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாக்கி, வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே குளிர் காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்பது மிகவும் அவசியம்.
குளிர்ந்த நீரும் இதயத் துடிப்பைக் குறைக்கும். ஏனெனில் குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் குடிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பைக் குறைக்கும். அதனால் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பது சில சமயங்களில் உயிர் ஆபத்தை கூட ஏற்படுத்தலாம்.
குளிர்ந்த காலநிலையில், குளிர்ந்த நீர் பற்களை சேதப்படுத்தும். உடல் குளிர்ந்த நிலையில் உள்ள போது குளிர்ந்த நீரைக் குடிப்பதால், நரம்புகள் (உணவுக்குழாய் மற்றும் வயிற்றில், தன்னிச்சையான செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும்) தன்னிச்சையாக செயற்பட முடியாத நிலை ஏற்படும்.
இதன் விளைவாக சுயநினைவு இழப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. குளிர்ந்த நீரை பருகுவது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் உடலின் திறனைக் குறைக்கும், மேலும் இரத்த வெள்ளை அணுக்களை தற்காலிகமாக குறைக்கும்.இதனால் எளிதில் நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஏனெனில் குளிர்ந்த நீர் பற்களின் நரம்புகளையும் வலுவிழக்கச் செய்யும். எனவே, உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், தவறியும் குளிர்ந்த நீரை குடிக்காதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |