தண்ணீரை கேன்களில் வாங்கி குடிக்கிறீர்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
இன்றைய காலங்களில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாளாந்த குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தண்ணீர் கேன்களை பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகின்றது.
ஆனால் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் ஏற்படும் சில தீங்கான பக்கவிளைவுகளை பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிளாஸ்டிக்கின் பக்க விளைவுகள்
பிளாஸ்டிக்கிலிருந்து வரும் இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.
நீண்ட நாட்கள் தண்ணீர் கேன்களை பயன்படுத்தும் போது காலப்போக்கில் தண்ணீரில் கசிந்து இரத்த ஓட்டத்தில் நுழைகிறது.
இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றது.
பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களைப் பயன்படுத்துவதால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
முக்கியமாக செரிமான பிரச்சினைகள் மற்றும் ஹார்மோன் சீர்குலைவு, புற்றுநோய் மற்றும் போன்ற அபாயகரமான நோய் நிலைமைகளை சந்திக்க நேரிடும்.
பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ரசாயனங்களை தொடர்ந்து உட்கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் சீர்குலையும்.
பிளாஸ்டிக் வாட்டர் கேன்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதால், டையாக்ஸின் எனப்படும் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருளை வெளிடப்படுகின்றது.
இது உடலினுள் சென்றால், மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் பித்தலேட்ஸ் எனப்படும் வேதிப்பொருள் இருக்கலாம், மேலும் அதிலிருந்து வரும் தண்ணீரை உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய் மற்றும் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கின்றது.
மேலும் பிளாஸ்டிக்கில் காணப்படும் பிஸ்பெனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பாரிய அளவில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பொருளின் செறிவில் சிறிது அதிகரிப்பு கூட ஹார்மோன் சுரப்பிகளின் செயலிழப்புக்கு காரணமாக அமையும்.
பிஸ்பெனால்-ஏ உடன் உடலின் விஷம் காரணமாக, பருவமடையும் போது, விந்தணுவை உருவாக்கும் செயல்முறையை பெரிதும் பாதிக்கின்றது. இதனால் ஆண்மை குறைப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது. ஆண்களுக்கு, பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து வரும் தண்ணீர் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
பெண்களும் BPA இன் எதிர்மறையான விளைவுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டும். பெண்களின் இனப்பெருக்க செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து தண்ணீரைக் குடிப்பது பொதுவாக முரணாக உள்ளது, ஏனெனில் பிஸ்பெனால் விஷம் காரணமாக, ஒரு குழந்தை பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும்.
அதனால்தான் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் தண்ணீரை சேமித்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சாத்தியமான அபாயங்கள் குறித்து நாம் நிச்சயமற்றவர்களாக இருந்தாலும், தீங்கு விளைவிக்கும் விஷயங்களைத் தவிர்த்துவிட்டு பாதுகாப்பான மாற்றுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
பிளாஸ்டிக்கை அகற்றுவது சவாலானதாக இருந்தாலும், அது எல்லா இடங்களிலும் இருப்பதால், முடிந்தவரை அதன் வெளிப்பாட்டைக் குறைப்பதே சிறந்தது.
ஆரேக்கியமான வாழ்கைகக்கு முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துகொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |