பேராபத்து... இனி எப்பவும் பழங்களை இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடாதீங்க!
பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? சில பழங்களை அப்படி சேர்த்து சாப்பிடும் போது, அது சில சிக்கல்கள், செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.
ஆகவே பழங்களை சாப்பிடும் போது அவற்றை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆரஞ்சு - கேரட்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவ்விரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அது நெஞ்செரிச்சல் உண்டாக்குவதோடு, சிறுநீரக சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
பப்பாளி - எலுமிச்சை
பப்பாளி மற்றும் எலுமிச்சை மிகவும் அபாயகரமான உணவு சேர்க்கை. இந்த இரண்டு பழங்களையும் ஒன்றாக சாப்பிடும் போது, அது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த உணவுச்சேர்க்கை பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு - பால்
ஆரஞ்சு மற்றும் பால் ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அது செரிமானமாவதற்கு கடினமாக இருப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம் செரிமானத்திற்கு காரணமான நொதிகளை அழித்து, செரிமான பிரச்சனையால் அவதிப்பட வைக்கும். ஒருவேளை நீங்கள் காலையில் பால் கலந்த செரில் மற்றும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க நினைத்தால், நீங்கள் அஜீரண பிரச்சனையின் அபாயத்தை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கொய்யாப்பழம் - வாழைப்பழம்
கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டுமே அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்கள் தான். ஆனால் இந்த இரண்டு பழங்களையும் ஒன்றாக சாப்பிட்டால், அது அசிடோசிஸ், குமட்டல், வாய்வுத் தேக்கம் மற்றும் தொடர்ச்சியான தலைவலி ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம் - பால்
அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்னும் பொருள் உள்ளது. இது பாலுடன் சேரும் போது, உடலில் தீவிரமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, குமட்டல், தொற்றுகள், தலைவலி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை உண்டாக்கும்.