இறக்குமதி செய்து விற்கப்பட்டு வரும் ஆபத்தான உணவுகள் - உயிருக்கு ஆபத்து...எச்சரிக்கையாக பார்த்து வாங்குங்கள்
இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் உணவுகள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு வருவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு.
அதற்காக அனைத்து உணவுப் பொருட்களுமே பாதுகாப்பற்றவை அல்ல.
இறக்குமதி செய்யப்பட்ட சில ஆபத்தான உணவுப் பொருட்களும் விற்கப்பட்டு வருகின்றன. அந்த உணவுப் பொருட்கள் எவையென்பதை தெரிந்து அவற்றைத் தவிர்த்தால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
முட்டைகள்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை நீங்கள் வாங்கினால், அவற்றை உடைத்து பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் முட்டைகளில் கால்சியம் கார்பனேட் மற்றும் பாராஃபின் ஆகியவற்றை பயன்படுத்துகின்றன. இவை கடுமையான ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்தும்.

உப்பு
பல ஆண்டுகளாக தொழில்துறை உப்பு தான் சீனாவில் டேபிள் உப்பாக விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வகை சோடியம் மனித நுகர்வுக்கானது அல்ல.
இது ஹைப்போ தைராய்டு பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க மண்டல கோளாறுகளை ஏற்படுத்தும்.

திலாப்பியா மீன்
தொழிற்சாலைகளில் விற்கப்படும் மீன்களைப் போலவே, இந்த மீன்களும் நச்சு கெமிக்கல்கள் நிறைந்த சிறிய நெரிசலான பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. எனவே இந்த வகை மீன்கள் கெமிக்கல்களை சுவாசிக்கின்றன.
கெமிக்கலை சுவாசித்து வாழும் இந்த வகை மீன்களை சாப்பிட்டால், ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அரிசி நூடுல்ஸ்
சீனாவில் நூடுல்ஸ் மிகவும் பிரபலமானவை. ஆனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி நூடுல்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சில சீன தொழிற்சாலைகள் நூடுல்ஸ் பிரஷ்ஷாக இருப்பதற்காக சல்பர் டை ஆக்ஸைடைப் பயன்படுத்துகின்றன. இந்த கெமிக்கல் புற்றுநோயுடன் தொடர்புடையது.

பூண்டு
வெளிநாட்டு பூண்டு பண்ணைகள் பூண்டுகளை கடைகளுக்கு அனுப்புவதற்கு முன் ரசாயன பொருட்களை பூசுவதாக கூறப்படுகிறது. நீங்கள் நாட்டு பூண்டுகளையும், சீன பூண்டுகளையும் அடுத்தடுத்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசத்தை நன்கு காணலாம்.

முட்டைக்கோஸ்
கோடைக்காலத்தில் அதிக வெப்பநிலையில் முட்டைக்கோஸ்கள் ஃபிரஷ்ஷாக இருக்க அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஃபார்மலின் கரைசலை அதன் மீது தெளிப்பார்களாம். எனவே இறக்குமதி செய்த முட்டைக்கோஸ்களை வாங்காமல் இருப்பது நல்லது.
மிளகு
மிளகில் களப்படம் செய்வது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதை வாங்கி உங்கள் சமையலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அந்த மிளகில் கடினமான மண் உருண்டைகளைக் காணலாம். ஏனெனில் சிலர் மிளகிற்கு பதிலாக மண் உருண்டைகளை சேர்த்து விற்கிறார்கள்.
