48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்த பிரச்சினை முடிவிற்கு வரும் நிலையில் அதற்குள் அடுத்த அழிவை ஏற்படுத்தும் கொடிய சதை உண்ணும் பாக்டீரியா தொற்று ஜப்பானில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொற்று ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என அழைக்கப்படுகிறது.
கொரோனாவை விட கொடுமையான மரணத்தை கொடுக்கும். அதுவும் 48 மணிநேரத்திற்குள் நிகழும் என மருத்துவர் கூறுகின்றனர்.
ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸின் தரவுகளின்படி, ஜப்பானில் கிட்டத்தட்ட 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் STSS என்றால் என்ன? எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
STSS என்றால் என்ன?
STSS என்பது குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) பாக்டீரியா ஏற்படும் கொடூரமான நோய் நிலைமை. இந்த பாக்டீரியாக்கள் நச்சுக்களை உடலில் இருந்து உருவாக்கும். இது உடலின் உயர் அழற்சி நிலை துண்டும்.
அத்துடன் விரைவான திசு நெக்ரோஸிஸ், தீவிர வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த செயற்பாட்டால் இரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளில் பாக்டீரியா இலகுவாக நுழையும். இதனால் விரைவாக உறுப்பு செயலிழப்பு ஆரம்பிக்கும்.
ஆரம்ப அறிகுறிகள்
- காய்ச்சல் வரும்.
- தசை வலி இருக்கும்.
- அடிக்கடி வாந்தி எடுப்பார்கள்.
- குறைந்த இரத்த அழுத்தம்
- உடல் உறுப்புகளில் வீக்கம், செயலிழப்பு ஏற்படும்.
மற்ற நாடுகளில் பரவியுள்ளதா?
டிசம்பர் 2022 இல், ஐந்து ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமிப்பு குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (iGAS)அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) அறிவித்துள்ளன.
அதிலும் குறிப்பாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
திறந்த காயம் உள்ள வயதானவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு STSS நோய் தொற்று இருப்பதை CDC கண்டுபிடித்துள்ளது.
ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கைகள்
- ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றார்கள்.
- STSS பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
- STSS இன் அறிகுறிகள் மற்றும் தீவிரத்தன்மை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
- உடனடி மருத்துவ சிகிச்சை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |