பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் உயிரிழப்பு! கதறும் ரசிகர்கள்
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் உயிரிழந்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். இவர் தமிழில் திருடா திருடி', மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
Heartbroken to hear about the demise of Shiv Shankar masterji. Tried our best to save him but God had different plans. Will always miss you masterji.
— sonu sood (@SonuSood) November 28, 2021
May almighty give strength to the family to bear this loss.
Cinema will always miss u sir 💔 pic.twitter.com/YIIIEtcpvK
இதையடுத்து உடனடியாக அவர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.