கால்கள் இல்லாத இளம்பெண்ணின் நடனம்.... உச்சக்கட்ட அதிர்ச்சியில் நடுவர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இரண்டு கால்கள் இல்லாத பெண் ஒருவர் நடனமாடி கலக்கியுள்ளார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
பிரபல ரிவிக்களில் மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றது. இதில் பாடும் திறமை உள்ளவர்களுக்கு சூப்பர் சிங்கர், சமைக்கும் திறமை உள்ளவர்களுக்கு குக் வித் கோமாளி என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது பிரபல ரிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சினேகா, சிம்ரன், பிரசாந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 24 வயதான பவித்ரா இரு கால்கள் இல்லாமல் உள்ள நிலையில் தனது நடன திறமையினை அரங்கத்தில் காட்டியுள்ளார்.
குறித்த பெண்ணின் நடனத்தை அவதானித்த நடுவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், சிம்ரன் அப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |