DJD 3-ல் Catwalk model-ஆக மாறிய கதிர்.. உயிரை பணயம் வைத்து ஆடிய பஞ்சமி
ஒரே நாளில் Catwalk model-ஆக மாறிய கதிர்- பஞ்சமியின் நடனம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
ரவீனாவுக்கு என்னாச்சு..
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று என்பதால் One On One Round நடந்தது. அதில், பஞ்சமி- கதிர் ஜோடி ஆடிய நடனம் நடுவர்கள் உட்பட முழு அரங்கத்தையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து கொண்டு, கந்தசாமி பட பாடலுக்கு இருவரும் போட்ட ஆட்டம், அவர்களுக்கு நடனம் பழகிக் கொடுத்த மாஸ்டரையும் வியக்க வைத்துள்ளது.
இதனை கவனித்த நடிகை வரலட்சுமி நடுவர் கதிரையில் இருந்து எழுந்து வந்து வாழ்த்தியுள்ளார். அரங்கத்தில் கிடைத்த ஆதரவுப்படி, கதிர்- பஞ்சமி வெற்றிப் பெறுவார்க்ள என பேசப்பட்டு வருகிறது. இணையவாசிகளும் தங்களின் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |