Dance Jodi Dance: தலையில் நடந்த அறுவை சிகிச்சை- மகளுக்காக ஆடிய இளைஞர்.. மண்டியிட்ட அரங்கம்
அறுவை சிகிச்சை செய்த தலையுடன் Audition-ன் கலந்து கொண்ட இளைஞருக்காக அரங்கத்தினரே மண்டியிட்ட காட்சி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த இளைஞரின் முயற்சி
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் Audition தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.
கனவுடன் வந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து மனைவி பேசுகையில், "என்னுடைய கணவரின் மூளையில் கட்டிகள் இருந்தன. அது 4ஆம் கட்டத்தில் இருந்த போது தான் எங்களுக்கு தெரிய வந்தது..” என கண்ணில் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த இளைஞர்,“என்னுடைய மகளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் நான் ஆடுகிறேன். அவள் பெரியவளாக வளர்ந்த பின்னர் என்னுடைய அப்பா மரணத்தை ஜெயிக்க இப்படியெல்லாம் செய்தாரா? என நினைக்க வேண்டும்” என்றார்.
குறித்த இளைஞர் ஆடிய பின்னர் அவருக்காக நடுவர்கள் உட்பட அரங்கத்தில் இருந்த அணைவரும் மண்டியிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இப்படியாக நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
