DJD மேடையில் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய போட்டியாளர்- சினேகா செய்த விடயம்
Dance Jodi Dance நிகழ்ச்சியில் நடுவர்கள் மெய்சிலிர்ந்து போகும் அளவுக்கு நடனம் ஆடிய இளைஞருக்காக சினேகா செய்த விடயம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
கண்ணீருடன் வந்த அம்மா
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், தில்லை எனப்படும் இளைஞரின் நடனம் இந்த வாரம் நடுவர்களையும், ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. அவர், நடனம் ஆடுவது அவரின் அம்மாவின் ஆசை என்றும் எனக்கு ராகவா லாரன்ஸ் போல் ஆக வேண்டும் என்பது தான் கனவு என்றும் கூறயுள்ளார்.
இதற்காக நடுவர்களில் ஒருவராக இருக்கும் சினேகா, ராகவா லாரன்ஸ்க்கு கோல் செய்து, இளைஞர் பற்றி கூறி, ஆசீர்வாதம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இப்படியாக இந்த வார ப்ரோமோ மற்றும் எபிசோட் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |