தினசரி மிளகு ரசம் சாப்பிடுங்க... அதிசயத்தை கண்கூடாக தெரியும்
தமிழர்களின் பிரபலமான உணவாக இருக்கும் ரசத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகளை பெற முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் மிளகு ரசம் சாப்பிடலாமா?
மிளகில் உள்ள பெப்பரைன் நீரிழிவை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கின்றது.
மேலும் இந்த பெப்பரைன் உடலில் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுப்பதுடன், தொண்டை வலி மற்றும் ஜலதோஷம் போன்றவற்றையும் சரிசெய்கின்றது.
image: foodsandflavorsbyshilpi
மிளகு ரசமானது வலியில்லாத சுவாசத்தை வழங்குவதுடன், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தையும் குறைக்கின்றது. சளியிலிருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கின்றது. சுவாச குறைபாடுகளையும் மிளகு ரசம் நீக்குகின்றது.
மிளகில் உள்ள வேதிப்பொருட்கள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல்களில் உள்ள பாக்டீரியாவைக் கட்டுப்படுத்துகின்றது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க முடியும்.
image: vismaifood
உடல் பருமனை குறைக்கவும், மெதுவான செரிமானத்தை ஆரோக்கியமாக மாற்றி, கெட்ட கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்கவும் உதவுகின்றது.
மிளகு ரசமானது மூட்டுவலியையும், அர்த்த்ரைட்டிஸ் போன்ற நோய்களின் அறிகுறிகளையும் குறைப்பதற்கு உதவுகின்றது.
மிளகு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலின் அனைத்து உறுப்பு பகுதிகளுக்கும் சத்துக்கள் உரிய அளவில் செல்ல உதவுகிறது.
மிளகு மற்றும் ரசத்தில் உள்ள சத்துக்கள் தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், தொற்று பரவலையும் தடுப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்து விளங்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |