தினமும் ஒரு கொய்யாப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளம்
தினமும் ஒரு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கொய்யாப்பழம்
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கொய்யா பழமானது பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளது.
நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
pinterest
தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை?
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு வகையான தொற்று நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், மலச்சிக்கலைத் தடுக்கவும் செய்கின்றது.
Getty Image/ Shutterstock
கொய்யாப்பழமானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்ததாகவும் இருக்கின்றது.
மேலும் இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கொய்யாப்பழத்தில் குறைந்த கலோரிகள் இருப்பதால், எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த தெரிவாகவே இருக்கும்.
இதிலுள்ள வைட்டமின் ஏ கண்பார்வையை மேம்படுத்துவதுடன், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாத்து இளமையாக வைப்பதற்கு உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |