பிரபல நடிகரை தாக்கிய ஏடிஎச்டி குறைபாடு.. இதற்கான அறிகுறிகள் என்ன?
ADHD (அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸார்டர்) என்ற நோய் எதனால் ஏற்படுகின்றது? இதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் ஃபகத் பாசில்
மலையாள நடிகரான ஃபகத் பாசில், தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஆவார். இவர் ADHD என்ற இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பலருக்கும் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இவர், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதே இந்த உண்மையை கூறியுள்ளார். இந்நோயினால் பொது நிகழ்ச்சியில் சரியாக பேச முடியாமல் சிரமப்படும் இவர், இதுகுறித்து வெளிப்படையாக கூறினார்.
சினிமாவில் நடிப்பதற்கு வனங்களை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்தே இவர் நடித்து வருகின்றார். பொது நிகழ்ச்சியில் சரியாக பேசுவதில்லை என்று மனைவி, அம்மா கூறிவருவதுடன், இதற்கு காரணம் தனக்கு இந்த நோய் இருப்பது தான் என்று கூறியுள்ளார்.
ADHD என்ற கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை குணப்படுத்த முடியாதா என்ற கேள்விக்கு, சிறுவயதில் இதனை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஃபகத் பாசிலுக்கு தற்போது வயது 41 வயதாவது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர் இவ்வாறு ADHD நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பல கேள்வியையும் எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து இணையத்தில் தேடல்களும் அதிகமாகியுள்ளது.
ADHD என்றால் என்ன?
சமீபத்தில் பெரியவர்களை அதிகமாக தாக்கும் “அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸார்டர்” அதாவது ஏடிஎச்டி குறித்து சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஏடிஎச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் ஏஎஸ்டி என்ற ஆட்டிசம் நோயைவிட மிக அதிக அளவில் மன கவலையையும், மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏடிஎச்டி என்பது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும். அதிகளவு கவனக்குறைவு அல்லது ஹைபர் ஆக்டிவாக செயல்படுவதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
உலக மக்கள் தொகையில் 3%-9% மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ADHD நோயின் அறிகுறிகள்
ADHD நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஒரு அறையில் இருப்பதை விட காரணம் இல்லாமல் மற்றொரு அறைக்கு அடிக்கடி சுற்றித் திரிவார்களாம்.
தூக்கத்திற்கு குறைவான நேரத்தினை எடுத்துக் கொள்ளும் இவர்கள், தாமதமாக தூங்கி சீக்கிரமாக எழுந்துவிடுவார்களாம்.
கொடுத்த வேலையை செய்து முடிப்பதற்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதாவது ஒரு அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் உள்ளவர்களிடம் கொடுக்க நாம் கூறினால், புரிந்து செய்வார்கள். ஆனால் அதிகமான கவனச்சிதறல் ஏற்பட்டு ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலையினை பல நிமிடங்கள் செய்து நேரத்தினை வீணடிப்பார்கள்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் என்றால், விளையாட்டு மற்றும் மான்டிஸரி பள்ளி என்றால், அதில் கூட உட்கார்ந்து இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கும்.
image: Verywell / Laura Porter
பொது இடங்களுக்கு சென்றால் முழுமையாக ஒரு விளையாட்டில் ஈடுபடமால் பல இடங்களில் உள்ள விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள்.
பள்ளி, வீடு, சூப்பர் மார்கெட், மால் போன்ற இடங்களுக்கு சென்றால் தனது பெற்றோர் ஆசிரியருடன் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளுக்கான மேலும் சில அறிகுறிகள்
அதிவேகத்தன்மை ADHDன் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். குழந்தைகள் தங்களது இருக்கைகளில் சலசலப்பில் ஈடுபடலாம், நடுங்கவும் செய்யலாம். அமர்ந்திருப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், அதிகமாக பேசுவது விளையாடுவது, ஓடுவது என பிரச்சனை ஏற்படும்.
பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் செயல்படுவது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். அவர்கள் மற்றவர்களை குறுக்கிடலாம் அல்லது அவர்களின் முறைக்காக காத்திருப்பதில் சிக்கல் இருக்கலாம். கேள்விகள் முடியும் முன்பு பதில்களை மழுங்கடிக்கலாம். இவை குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதையோ அல்லது விதிகளைப் பின்பற்றுவதையோ கடினமாக்குகின்றது.
malija/Getty Images
ADHD உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பணிகளை மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் சிரமப்படுவார்கள். அவர்கள் தங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிப்பது கடினமாக இருப்பதால், நேரத்தினை தவற விடுவதற்கு, பணிகளை மறந்துவிடுவதற்கும் வழிவகுக்கின்றது. வீட்டுப்பாடம் அல்லது சோதனைகளுக்குப் படிப்பது போன்ற நீடித்த மன முயற்சி தேவைப்படும் பணிகளையும் இதன் காரணமாக தவிர்த்து விடுவார்கள்.
மறதி என்பது ADHD இன் மற்றொரு அறிகுறியாகும். வேலைகள் அல்லது சந்திப்புகள் போன்ற அன்றாட நடவடிக்கைகளை குழந்தைகள் மறந்துவிடலாம். புத்தகங்கள், பென்சில்கள் அல்லது பொம்மைகள் போன்ற தேவையான பொருட்களையும் அதிகமாக தொலைத்துவிடுவது உண்டு.
இந்த நோய் பாதிப்பில் உள்ள குழந்தைகள் மனநிலை மாற்றங்கள் ஏற்படும். திடீர் கோபம், விரக்தி போன்ற பிரச்சனை ஏற்படும். இந்த மனநிலை மாற்றங்கள் விரைவாகவும் எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம்.
ADHD உள்ள குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பழகுவதில் சிக்கல் இருக்கலாம். அவர்கள் சமூக திறன்களுடன் போராடலாம் மற்றும் நண்பர்களை உருவாக்குவது கடினமாக இருக்கும்.
மோசமான கல்வி செயல்திறன் ADHD இன் அறிகுறியாக இருக்கலாம். கவனக்குறைவு மற்றும் ஒழுங்கின்மை காரணமாக குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர சிரமப்படலாம். பெரியவர்கள் வெளியிடங்களில் பேசுவதற்கு முடியாமல் சிறமப்படுவார்கள்.
ADHD எதனால் வருகிறது?
ADHD குறைபாடு என்பது மூளையில் ஏற்படும் நரம்பு தொடர்பான பிரச்சினை. எந்தக் காரணங்களால் நரம்புக்கடத்திகள் மெதுவாக செயல்படுகின்றது என்பதை இதுவரை மருத்துவ துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இருப்பினும் மரபியல், சுற்றுச்சூழல், சமூக காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குழந்தைகள் விஷயத்தைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில் தாய் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவற்றாலும், பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே பிறக்கும் குழந்தை, எடை குறைவாக பிறக்கும் குழந்தை போன்ற காரணங்களாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |