தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க... கண்கூடாக தெரியும் அதிசயம்
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் இருக்கின்றது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் B6, நார்ச்சத்தும் காணப்படுகின்றது.
வாழைப்பழத்தில் சர்க்கரை நிறைந்துள்ளதால், உடம்பிற்கு உடனடியாக ஆற்றலை வழங்குவதுடன், இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது.
இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கின்றது.
வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சத்தானது தசைப்பிடிப்பைத் தடுக்கவும், தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.
மேலும் இவை மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கமின்மையைத் தடுக்கவும் செய்கின்றது.
இதிலுள்ள வைட்டமின் சி சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயதான தோற்றத்தை தடுக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |