தினமும் அசைவம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அசைவப்பிரியர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நன்மை உண்டு என்பது பொய் இல்லை, ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
அசைவம் சாப்பிடுவதால் என்னென்ன உடல்நலக் குறைபாடுகள் உங்களைப் பாதிக்கத் தொடங்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆபத்தை ஏற்படுத்துமா?
தினமும் அசைவம் சாப்பிடுவதால் இதய நோய் பிரச்சனை அதிகரிக்கும் என சுகாதாரண நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினமும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அசைவ உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. இதை நீங்கள் தினமும் சாப்பிடுவதால் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், அசைவ உணவு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது வாயு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். இதனால் உங்களது வயிற்றுக்கு அதிகளவில் தொந்தரவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
அதிக சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றது. எனவே முடிந்தவரை சிவப்பு இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் அசைவம் சாப்பிடுவது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.
அசைவ உணவில் தேவையை விட அதிக புரதம் உள்ளது. எனவே நீங்கள் அதிக புரதம் சாப்பிடுவது சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அதிகப்படியான அசைவம் சாப்பிடுவதால் கல்லீரலில் அதிகப்படியான அழுத்தம், கொழுப்பு இவைகள் கல்லீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |