சப்பாத்தி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க
இன்றைய மக்கள் தங்களது உணவுப்பட்டியலில் முக்கியமாக வைத்துக் கொள்வதில் சப்பாத்தியும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் சப்பாத்திக்கு பலரும் அடிமை.
அதிலும் நீரிழிவு நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைப்பதற்கு சப்பாத்தியே விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பல வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் காணப்படுகின்றது.. இந்நிலையில் இரவில் சப்பாத்தி சாப்பிடுவது ஆரோக்கியமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சப்பாத்தியில் உள்ள சத்துக்கள்:
சப்பாத்தியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது.
மேலும் இதில் ஜிங்க், காப்பர், அயோடின், சிலிகான், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் காணப்படுகின்றது.
இரவில் சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:
இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதால் கார்போ ஹைட்ரேட் அதிகரித்து உடல் எடை அதிகரிக்கின்றது. கலோரி அதிகமாக இருக்கும் இதனை சாப்பிட்டு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீரிழிவு மற்றும் பிசிஓடி பிரச்சினை இருப்பவர்கள் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் சர்க்கரையின் அளவு அதிகரித்து இன்சுலின் உற்பத்தி செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உணவு செரிமானம் ஆகாமால் வளர்சிதை மாற்றம் தடைபடுகின்றது. மேலும் குடல் இயக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
தினமும் சப்பாத்தி சாப்பிடுவதால் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அமிலம் போன்ற பிரச்சினை ஏற்படுவதால், ரொட்டிக்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.