நாள் முழுவதும் நீங்க பாசிட்டிவ்வா இருக்கணுமா? பெரிய தட்டுல சாப்பிடக்கூடாதாம்
நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினசரி இந்த 7 விடயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதிகாலையில் எழுந்து சில உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது. இதனால் மனம் ஒருநிலைப்படுவதுடன், அன்றைய தினமும் நேர்த்தியாக இருக்குமாம்.
உணவு உண்ணும்போது சிறிய தட்டுகளைப் பயன்படுத்தினால் அதிகப்படியாக உண்ணாமல் பசிக்கு மட்டுமே சாப்பிடுவோம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்காமல் அவ்வப்போது 5 முதல் 10 நிமிடங்கள் நிறக வேண்டும். இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும்.

தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், நம் கனவுகளைப் பற்றி, விருப்பங்கள் பற்றிச் சிந்திக்கலாம். இது பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தும்.
அன்றாட உணவில், ஒரு காய், ஒரு கீரை என சேர்த்துக் கொள்ளலாம். பல வண்ணக் காய்கறிகளில் பல சத்துகள் உள்ளன என்பதால் தினமும் ஒரு நிறத்தில் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் இரவு உறங்குவதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்பு மொபைலை ஆஃப் செய்து வைக்கலாம். இதனால் மனம் அமைதியாக நன்றாக உறக்கம் வரும்.
குறித்த நேரத்தில் தூங்கி, எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். இரவில் தூக்கம் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவு மறுநாள் புத்துணர்வோடு இருக்கலாம்.
