முட்டை பேராபத்தினை ஏற்படுத்துமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
புரதச்சத்து நிறைந்த உணவாக இருக்கும் முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், உடம்பிற்கு தேவையான புரதமும் மற்றும் பல சத்துக்களும் கிடைக்கின்றது.
முட்டையில் புரத சத்தை தவிர, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன. இவ்வாறு சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும். அது என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?
முட்டை ஒன்றில் சுமார் 1800 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடுவது நல்லது. அதற்கு மேல் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
முட்டையில் அதிகமான புரதச்சத்து நிறைந்திருப்பதால், அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கின்றது. ஆகையால் சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் முட்டையை உட்கொள்வதை தவிர்க்கவும்.
மேலும் செரிமான அமைப்பை பாதிப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சினைக்கும் வழிவகுக்கின்றது. வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகளும் ஏற்படும்.
அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு அபாயம் ஏற்பட்டு உடல் பலவீனமடையவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |