தினமும் தயிர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா? ஜாக்கிரதை... இனி இந்த பிழையை செய்யாதீர்கள்
தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும். தயிரை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும். பாலிலிருந்து உருவாவதுதான் தயிர்.
தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும்.
தயிர் இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகும்.
இதில் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.
அந்தவகையில் தயிரை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி பார்ப்போம்.
நன்மைகள்
- தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும்.
- உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும்.
- மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது.
- இதனால் உடல் எடை குறையும். தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.
தீமைகள்
- தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
- தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
- தயிரை சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் கண்டிப்பாகத் தயிர் சாப்பிடக்கூடாது.
- வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் உடலில் அரிப்பு ஏற்படும்.
- சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
- தயிருக்குப் பதில் வெண்ணெய் நீக்கிய மோரை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்.