வெறும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்திடுங்க... உடம்பில் இந்த மாற்றங்கள் நிகழுமாம்
30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதால் உடம்பில் நடக்கும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நமதுத உடலில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு நடைபயிற்சி ஒரு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் வெறும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் நடக்கும் அற்புத மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
30 நிமிட நடைபயிற்சி
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது எலும்புகள் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்குகின்றது. இதனால் உடலிலிருந்து அதிக ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. எலும்புகளில் அடர்த்தி மேம்படவும், வயதான காலத்தில் அஸ்ட்ரோபோராசிஸ் என்ற எலும்பு முறிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது.
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மனநிலையை சீராக்கக் கூடிய எண்டோர்பின்களின் சுரப்பு தூண்டப்படுகின்றது. இதனால் மன அழுத்தம், மன சோர்வு கவலைகள் நீங்கும்.
நடந்தால் அதிக ஆற்றலை இழப்பதாக நீங்கள் நினைப்பது உண்மையல்ல. ஆம் நடைபயிற்சியின் போது ஆற்றல் அதிகரிப்பதுடன், ரத்த ஓட்டம் மேம்பட்டு செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் ஊட்டச்சத்தை கடத்துகின்றது.
30 நிமிட நடைபயிற்சி மேற்கொண்டால், நோய்களின் அபாயத்தை குறைக்க முடிகின்றது. இதய நோய், பக்கவாதம், நீரிழிவு வகையான நோய்கள் வராமல் தடுப்பதுடன், புற்றுநோய் வராமலும் தடுக்கப்படுகின்றது.
உடல் எடையை குறைப்பதற்கு டயட், ஜிம் போன்ற கடுமையான உடற்பயிற்சியினை மேற்கொள்ளாமல், வெறும் நடைபயிற்சி மேற்கொண்டாலே குறைக்கலாம். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால் கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட்டு, கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |