தினமும் 2 கறிவேப்பிலை எடுத்துக்கோங்க... எண்ணற்ற மாற்றத்தை பெறுவீர்கள்
நாம் அன்றாடம் இரண்டு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை என்பது சக்திவாய்ந்த ஒரு வீட்டு வைத்திய பொருளாக இருக்கின்றது. இவை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமாக கொழுப்பை எரிப்பதற்கும் உதவுகின்றது.
இதில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் உடல் பருமனுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளதுடன், உடல் எடையைக் குறைக்கவும் செய்கின்றது.
செரிமானத்தை மேம்படுத்தவும், இதய நோய் அபாயத்தையும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்துகின்றது.
கறிவேப்பிலையின் சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் A, B, C, மற்றும் E, போன்றவற்றுடன் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து போன்ற தாதுக்களும் காணப்படுகிறது.
இந்த இலைகளில் நிறைந்திருக்க கூடிய ஆன்டிஆக்சிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.
கறிவேப்பிலையை எவ்வாறு சேர்க்கலாம்?
காலை வெறும் வயிற்றில் ப்ரெஷ்ஷான கறிவேப்பிலை இலையில் 2 வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பலன் அதிகரிக்கும்.
நாம் சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலையை எடுத்து ஒதுக்கிவைக்காமல் சாப்பிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கறிவேப்பிலை சாதம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
தூங்கும் முன்பு கறிவேப்பிலையை டீ போட்டு குடித்தால் உடல் எடை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |