10 மணி நேரத்துக்கு மேல் தூங்குறீங்களா? இந்த நோயாக கூட இருக்கலாம் உஷார்
அதிகமான நேரம் தூங்கினால் என்னென்ன பிரச்சனைகள் உடம்பில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிகமாக தூங்கினால் என்ன நடக்கும்?
பொதுவாக குழந்தைகள், இளம் வயதினர், கர்ப்பிணிகள், நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு சற்று கூடுதல் தேவைப்படலாம்.
ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் தொடர்ந்து அதிகமான நேரம் தூங்குவது பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

அதிகப்படியான தூக்கம் உடல் செயல்பாடுகளைக் குறைப்பதாக அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. படுக்கையில் அதிக நேரம் செலவழிப்பது உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பினை அதிகமாக்குகின்றது.
இந்த பழக்கம் காலப்போக்கில், உடலிலன் வளர்சிதை மாற்றத்தினை மெதுவாக்குவதுடன், நீண்ட நேரம் தூங்குவதால் உடல் பாரமாகவும், மந்தமாகவும் மற்றும் தலைவலி இருப்பதாக உணர்வு ஏற்படுகின்றது.

என்னென்ன பிரச்சனை ஏற்படும்?
அதிகப்படியான தூக்கம் ஸ்லீப் அப்னியா என்ற நரம்பியல் சார்ந்த தூக்க பிரச்சனை அல்லது உடல் ரீதியான அமைதியின்மை போன்ற பிரச்சனையாக இருந்தாலும் மக்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக தூங்குவார்களாம்.
நன்றாக தூங்கிய பின்பு ஒரு நபர் சோர்வை உணரலாம். ஒழுங்கற்ற தினசரி நடைமுறைகள், நீண்ட கால மன அழுத்தம், மோசமான உணவுமுறை மற்றும் காஃபின் அல்லது மதுபானங்களை அதிகமாக உட்கொள்வதும் தூக்கத்தின் முறையினை பாதிக்கும்.

சில தருணங்களில் இந்த நிலையானது ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. அதாவது தைராய்டு, இரத்த சர்க்கரை சமநிலையின்மை மற்றுமு் நரம்பியல் குறைபாடு கூட ஒருநபர் அதிகமான நேரம் தூங்குவதற்கு காரணமாகும்.
ஆகவே தூக்கதில் திடீர் அதிகரிப்பு, தொடர்ச்சியான சோர்வு இவற்றினை அலட்சியப்படுத்தக்கூடாது. அதிக தூக்கத்துடன் சேர்ந்து குரட்டையிடுதல், சுவாசப் பிரச்சனை, திடீர் உடல் எடை அதிகரிப்பு அல்லது நினைவாற்ற்ல் ்குறைபாடு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |