என்னோட அப்பா யாரும்மா? 27 ஆண்டுகளுக்கு பின் பாலியல் புகார் கொடுத்த பெண்ணால் பரபரப்பு
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது புகார் கொடுத்துள்ள பெண்ணால் பரபரப்பானது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவரே இத்தகைய புகாரை கொடுத்துள்ளார். அதில், 1994ம் ஆண்டு தனக்கு 13 வயதாக இருக்கும் போது தன்னுடைய உறவினர் வீட்டில் இருந்ததாகவும், அதே பகுதியில் வசித்த நாகி ஹசன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது அண்ணனும் தன்னை துன்புறுத்தியதாகவும், சமூகத்துக்கு பயந்து என்னுடைய உறவினர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நானும், என்னுடைய அக்காவும் லக்னோ சென்ற போதே, தான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து குற்றவாளிகளை தொடர்பு கொண்ட போது, மிரட்டியதால் விலகிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு 14 வயதே ஆனதால் குழந்தையை பெற்றெடுத்து தத்துக்கொடுத்த பின்னர், வேறொரு திருமணம் செய்து தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் தன்னுடைய குழந்தையை தேடி மீண்டும் சேர்ந்த நிலையில், தன்னுடைய தந்தை யார்? என கேட்டதால் இந்த புகாரை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது: பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து அண்ணன், தம்பிகளை தேடி வருகிறோம், அவர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு தயார் படுத்தி வருகிறோம். 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பலாத்காரத்தில் ஆதாரங்களை திரட்டுவது அவ்வளவு எளிதல்ல, இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.