இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்வது கடினம்... இசையமைப்பாளர் டி. இமான் பரபரப்பு பேட்டி
இசையமைப்பாளர் டி. இமானுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப் பெரிய துரோகம் செய்து விட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றாச்சாட்டொன்றை வைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொத்த முயற்சியால் முன்னேறி வருபவர் தான் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
முதன் முதலில் காமெடி நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கிய கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து என பல வித்தியாசமான படங்களை நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இமானுக்கு செய்த துரோகம்
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு ஒரு விடயம் தான் சிவகார்த்திகேயன் - டி.இமான் சர்ச்சை. இசையமைப்பாளர் டி. இமான் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாக கூறியிருக்கிறார். தனிப்பட்ட சில காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்த்து பயணிப்பது கடினமானதொன்று. வேண்டும் என்றால் அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது.
இந்த முடிவை நான் முழு கவனத்துடன் எடுத்த முடிவு. அவர் எனக்கு செய்த துரோகத்தை நான் தாமதமாகத்தான் உணர்ந்துக் கொண்டேன். இதைப்பற்றி நான் அவரிடம் நேராகவே கேட்டு விட்டேன். ஆனால் அவற்றை என்னால் வெளியில் சொல்ல முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் இருவரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா போன்ற திரைப்படங்களில் இணைந்து பணிப்புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#DImman OFFICIALLY mentions he won’t be working with #Sivakarthikeyan henceforth due to a betrayal of trust
— Movies Singapore (@MoviesSingapore) October 16, 2023
Shocking & heartbreaking to hear ?
The duo have delivered several CHARTBUSTER rural songs that looked so pleasing visually with #SK
???
pic.twitter.com/NNy0KaijlR
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |