வயிற்று வலியால் அவதிப்படும் நபர்களுக்கு மருந்தாகும் Cyclopam மாத்திரைகள்
அடிவயிற்று வலிக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரை Cyclopam.
வயிறு மற்றும் குடல் அசௌகரியம், வலிகளை போக்குகிறது. வலியை ஏற்படுத்தும் chemical messengersகளை கட்டுப்படுத்துவதால் குணமாக்குகிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Cyclopam மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் உணவுடன் எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும்.
நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே எடுக்கவும், அளவுக்கு அதிகமாகவோ அளவுக்கு குறைவாகவோ எடுக்க வேண்டாம்.
இதேபோன்று மருத்துவர் குறிப்பிட்ட நாட்கள் முழுமையும் எடுக்கவும், நோயின் தீவிரம் குறையும் போதே நிறுத்திக்கொண்டால் மறுபடியும் தீவிரமடையலாம்.
பக்கவிளைவுகள்
வாந்தி
மங்கலான பார்வை
சோர்வு
பதட்டம்
இது பொதுவான மற்றும் தற்காலிகமான பக்கவிளைவுகளே. இதை தவிர இன்னும் பிற பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Cyclopam மாத்திரை எடுத்துக்கொண்ட பின்னர், தூக்க கலக்கம் இருக்கலாம் என்பதால் வாகனங்களை இயக்க வேண்டாம், ஆல்கஹாலும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்ணாக இருப்பின் மருத்துவரிடம் கூறவும்.
Cyclopam மாத்திரைகள் பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுகவும்.
உடலில் நீர் வறட்சி இருக்கலாம் என்பதால், அதிகளவு தண்ணீர் அருந்தவும், சத்தான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.
Cyclopam மாத்திரைகளிலும் பாரசிட்டமால் உள்ளது, எனவே மற்ற பாரசிட்டமால் மாத்திரைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்கு மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டாலும் மருத்துவரிடம் தெரிவித்துவிடவும்.
குறிப்பு- எந்தவொரு அறிகுறி/நோய்த்தொற்றாக இருந்தாலும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டாக்கலாம்.