பஞ்சாப் மாநிலத்தில் சுழற்றி அடித்த சூறாவளி.... - பதற வைக்கும் வீடியோ வைரல்
பஞ்சாப் மாநிலத்தில் சுழற்றி அடித்த சூறாவளியின் பதற வைக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் சூறாவளி
பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் நேற்று பயங்கர சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளியால் கிட்டதட்ட 50 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிறகு இந்த சூறாவளி பாகிஸ்தானை நோக்கி நகர்ந்தது. தற்போது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பதற வைக்கும் வீடியோ வைரல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலம், ஃபாசில்கா மாவட்டத்தில் வீசிய சூறாவளி எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.