காமெடி வடிவேலு போல பாட்டிலில் கவுந்து கொண்ட நாயின் தலை... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி
மனிதனின் மிகச்சிறந்த நண்பன் நாய் என்பது உலகறிந்த கூற்று.
அதே போல, சில நேரங்களில் நாய்க்கும் மனிதனின் உதவி இன்றிமையாததாக அமைந்து விடுகிறது.
அதைப் போன்ற ஒரு நெகிழ்வான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த நிலையில் சைக்கிலிஸ்ட்டுகள் குழு ஒன்று ஒரு நாய்க்கு உதவிய வீடியோ ஒன்று டிவிட்டரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Heroes save this dog stuck in plastic…
— Mack & Becky Comedy (@MackBeckyComedy) October 5, 2021
Look at how grateful he is… ?❤️ pic.twitter.com/ETFockNzXJ
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு நாயின் தலை சிக்கியிருந்தது. அதனைக் கண்ட ஒரு சைக்கிளிஸ்ட்டுகள் குழு, தவிக்கும் நாய்க்கு உதவி செய்ய முன்வந்தனர்.
நாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலை நாயின் தலையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்தார்கள்.
வீடியோ கிளிப்பின் தொடக்கத்தில், சைக்கிளிஸ்ட் ஒருவர் மென்மையாக பாட்டிலை நீக்க முயற்சி செய்யும் போது, அவர் உடன் வந்தவர்களும் உதவ முன்வந்தனர். இவர்கள் பாட்டிலை நீக்க முயற்சி செய்யும் போது, நாயும் அமைதியாக அமர்ந்திருந்தது ஆச்சரியம்.