பப்ஜி மதன் வழக்கில் இப்படி ஒரு ட்விஸ்டா.... நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி தீர்ப்பு!
பப்ஜி விளையாட்டில் ஆபாச பேச்சுகளை பேசி வந்த மதன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 புகார்களின் அடிப்படையில் 32 சாட்சியங்களைக் கொண்டு யூ-டியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைக் கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கில் அதிரடி திருப்பமாகக் குற்றப்பத்திரிக்கை நகலானது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிடம் வழங்கப்பட்டுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குவதற்காக யூ-டியூபர் பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இருவரிடம் குற்றப் பத்திரிகை நகலை நீதிமன்றம் வழங்கியது. வழக்கை எதிர்கொள்வதாக இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகு, வரும் 28-ம் தேதி வழக்கு விசாரணை தொடங்கப்படும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        