நான் கூறினால் விஷத்தை குடித்து விடுவீர்களா? மலேசியா பெண்ணை சரமாரியாக பேசிய வெங்கடேஷ் பத்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பாட் குறித்து மலேசிய பெண் ஒருவர் கூறிய கருத்துக்கு வெங்கடேஷ் அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் கொமடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக சில பிரபலங்களும், சில பிரபலங்கள் கோமாளிகளாகவும் அசத்தி வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருப்பவர்களை நடுவர் வெங்கடேஷ் சரமாரியாக பேசுவதும், பொருட்களை தூக்கி எறிவதுமாக இருந்து வருவதை பார்த்து மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
மலேசிய பெண் கூறிய கருத்து
வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்னர் அடுத்த 14ம் தேதி புதிய யூடுயூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக முகநூலில் பதிவிட்டதையடுத்து, இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால் மலேசியாவில் உள்ள பெண் ஒருவர் குறை சொல்லி கமன்ட் செய்து இருந்தார். அதில் ”நான் மலேசியாவில் இருந்து குக்கு வித் கோமாளி ரசிகை, நீங்கள் கோமாளியை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலாக இருக்கிறது தயவு செய்து இந்த நிகழ்ச்சியை இருக்கிறது ஒரு நல்ல உதாரணமாக இருங்கள்.
அதை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள்... மேலும் மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள்.
நீங்கள் இதையெல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டும்தான் உண்மை இல்லை என்று சொன்னாலும் மலேசியாவை சேர்ந்த எங்களால் இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தயவுசெய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ இதனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.
வெங்கடேஷின் பதில் என்ன?
இதற்கு வெங்கடேஷ் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியினை பார்க்காதீர்கள்... சார்லி சாப்ளின் அடிவாங்கவில்லையா? செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கவில்லையா என்று கூறியுள்ளார்.
மேலும் கொஞ்சமாவது வளருங்கள், இது வெறும் ஒரு நிகழ்ச்சி. நான் சொன்னேன் என்பதற்காக விஷயத்தை எடுத்து குடித்து விடுவீர்களா உங்களுக்கு என்று சுய புத்தி கிடையாதா’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.